பாரதியார்

பயனெண்ணாமல் உழைக்கச் சொன்னாள்.
பக்தி செய்து பிழைக்கச் சொன்னாள்.
துயரிலாதெனைச் செய்துவிட்டாள்.
துன்பமென்பதைக் கொய்துவிட்டாள்.

----பாரதியார்.

Friday, March 1, 2013

பிறவி மர்மங்கள் - முகவுரை


“Many Lives Many Masters” - உண்மை நிகழ்வுகள் மட்டுமே கொண்ட ஒரு நூல். DR.Brian Weissஎன்ற பெயருடைய மன நல மருத்துவர் 1988-ல் எழுதி வெளிவந்தது. என்னால் முடிந்தவரை மொழி பெயர்க்க முயற்சி செய்கிறேன். இனி புத்தகத்திற்கு செல்வோம்.

 

முகவுரை

நமது வாழ்க்கையில் ஒவ்வொரு நிகழ்வுக்கும் ஏதாவது ஒரு காரணம் உண்டென்பது எனக்குத் தெரியும். ஏதாவது ஒரு நிகழ்ச்சி நடந்தால் அது ஏன் நடக்கிறது, பிறகு என்ன நடக்க போகிறது என்பதை புரிந்து கொள்ளும் அறிவு நமக்கு இல்லை. காலமும் பொறுமையும்தான் அதற்கான பதிலை தரமுடியும்.

அவள் பெயர் கேதரின். 1980-ல் முதன்முதலாக கேதரினை நான் சந்தித்தேன். அப்பொழுது அவளுக்கு வயது இருபத்தேழு. பதற்றம், தேவையில்லாத பயம், பதற்றத்தினால் மூச்சுத்திணறல், தலைசுற்றல், இது போன்ற பிரச்சனைகளுக்காக என் கிளினிக்கு வந்தாள். சின்ன குழந்தையிலிருந்தே இந்த பிரச்சனைகள் இருந்தாலும், கொஞ்ச காலமாக பிரச்சனை அதிகரித்தால் என் கிளினிக்கு வந்தாள். அதிக மனச்சோர்வுக்கு ஆளாகி இருப்பதும், பயந்து இருப்பதும் பார்ப்பதற்கு நன்றாகவே தெரிந்தது. அதிக மனத்தளர்ச்சியில் அனுதின வேலைகளை செய்வது கூட கடினமாக இருக்கிற நிலையில் என் கிளினிக்கு வந்தாள்.

ஆனால் அந்த நாட்களில் என் வாழ்க்கை அவள் வாழ்க்கைக்கு எதிர்மறையாக தெளிந்த நீரோடை போல இருந்தது. நிம்மதியான குடும்ப வாழ்க்கை, அழகான இரு குழந்தைகள், ஏறுமுகத்தில் தொழில். ஒரு கொடுப்பினையான வாழ்க்கை.

பிறந்தது முதல் என் வாழ்க்கை ஒரு சரியான பாதையிலேயே இருந்தது. அன்பான குடும்பம், சுலபமாக படிப்பில் நல்ல மதிப்பெண் பெறும் திறமை எல்லாம் இருந்தது. பட்டப்படிப்பில் மனநல மருத்துவம் படிக்க முடிவு எடுத்தேன். 1966-ல் கொலம்பியா யுனிவர்சிடியில் முதல் பட்டம் வாங்கினேன். அதன் பிறகு Yale University School of Medicine ல், நான் M.D படிப்பை முடித்தேன். New York University-Bellevue Medical Centre ல், house surgeon முடித்துவிட்டு, Psychiatry அனுபவ பயிற்சிக்கு Yale University திரும்பினேன். அதை முடித்து விட்டு University of Pittsburgh- ல் faculty ஆக சேர்ந்தேன். இரண்டு வருடங்களுக்கு பிறகு, University of Miami - ல் psychopharmacology division - க்கு தலைமை பதவியில் சேர்ந்தேன். அங்குதான் எனக்கு biological psychiatry and substance abuse - பிரிவில் தேசிய அங்கீகாரம் கிடைத்தது.

நான்கு வருடங்களுக்கு பிறகு மியாமி பல்கலைகழக மருத்துவமனையில், மனநல பிரிவுக்கு தலைமை பதவியேற்றேன். அந்த காலகட்டத்தில் முப்பத்தியேழு ஆராய்ச்சி கட்டுரைகள் வெளியிட்டு இருந்தேன்.

தொடர்ந்து ஆராய்ச்சி பிரிவிலும், மன நல பிரிவிலும் - வேலை,படிப்பு இரண்டிலும் ஈடுபட்டதால், எனக்கு ஒரு நல்ல மருத்துவராகவும் அதே சமயத்தில் ஆராய்ச்சி மனப்பாங்கோடு பிரச்சனைகளை அணுகுவதும் இயல்பாகவே அமைந்திருந்தது. அதனால் ஆதாரமில்லாத கொள்கைகள்,ஆதாரமில்லாத தத்துவங்கள் எதனையும் என் மனது ஒத்துக்கொள்ள முடியாத நிலை இருந்தது. அந்த காலத்தில் parapsychology (மனித மனதுக்கு அப்பாற்பட்ட நிகழ்வுகள் பற்றியது) பிரிவில் நிறைய ஆராய்ச்சிகள் பெரிய பல்கலைகழகங்களில் நடந்தது எனக்கு தெரியும். அப்பொழுது அதனை ஒரு பொருட்டாக நான் மதித்ததில்லை.

இந்த காலகட்டத்தில்தான் கேத்தரினை நான் சந்தித்தேன்.கிட்த்தட்ட பதினெட்டு மாதங்கள் வழக்கமாக அனுசரிக்கும் ஆலோசனை முறை, சிகிச்சைகளை அவளுக்கு வழங்கினேன். அது எதுவும் பலனளிக்காத்தால் ஹிப்னடைஸ் செய்து குணப்படுத்த முயற்சி செய்தேன். அப்பொழுது கேத்தரின் அவளுடைய முற்பிறப்பில் நடந்த நிகழ்ச்சிகளினால் பாதிக்கப்பட்டிருப்பதை உணர்ந்தேன். ஹிப்னடைஸ் பண்ணும்போது தேவதைகளின் தொடர்பு கொண்டு அவளால் முற்பிறவிக்கும் இப்பிறவிக்கும் இடையில் ஒரு நல்ல பாலமாக, ஒரு தொடர்பு கருவியாக செயல்பட ஆரம்பித்தாள். அதனால் இறப்புக்கும்,பிறப்புக்கும் உள்ள ரகசியங்கள் எனக்கு புரிய ஆரம்பித்தன. அவளுடைய இறப்புக்கும்,பிறப்புக்கும் முந்தைய பிறவிகளுக்கும் உள்ள ரகசியங்களை, அவள் ஹிப்னடைஸுக்கு உள்ளாகி இருக்கும்பொழுது அறிந்து கொண்டேன். அதன் பிறகு மிகவும் குறுகிய காலத்தில், சில மாதங்களில் அவளது உபாதைகள் குறைய ஆரம்பித்தன. அவளது வாழ்க்கை நிம்மதியாகவும்,முன்பை விட இன்பமாகவும் ஆகியிருந்தது.

நான் செய்த ஆராய்ச்சிகளோ, படித்த படிப்போ என்னை இந்த விதமான ஒரு அனுபவத்துக்குத் தயார் செய்யவில்லை. நடந்த நிகழ்ச்சிகளால் நான் பேராச்சரியத்துக்கும், அதிர்ச்சிக்கும் ஆளாகியிருந்தேன்.

நடந்த நிகழ்ச்சிகளுக்கு விஞ்ஞான பூர்வமாகவோ, தர்க்க ரீதியாகவோ என்னால் எந்தவிதமான விளக்கங்களையும் கொடுக்க முடியவில்லை. மனித இதயம்,நம் விளக்க எல்லைகளுக்கு அப்பாற்பட்டதென்பதை உணர ஆரம்பித்தேன். ஹிப்னாடிஸ மயக்கத்தில் கேத்தரின் தன்னுடைய மனதில் உறங்கியிருக்கும் முற்பிறவி நினைவுகளை தட்டி எழுப்ப முடிந்தது. Psychoanalyst, Carl Jung சொன்னதுபோல், ஆழ்மனதில் உறங்கி கிடக்கக்கூடிய அனைத்து விவரங்களையும் அவளால் தொட முடிந்தது.

அறிவியலாளர்கள் இதற்கான காரணங்களை கண்டறிய முயற்சி செய்தார்கள். சமூகம் - ஆவி, மறுபிறவி, இறப்புக்குப் பிகு மனிதனின் நிலை, இந்த பிறவியில் முற்பிறவியின் தாக்கம், போன்ற துறைகளில் செய்யக்கூடிய ஆராய்ச்சிகளினால் நல்ல பயனை அடைய வாய்ப்புகள் உள்ளது. இந்த ஆராய்ச்சிகளின் முடிவுகள் மனநல மருத்துவம், தத்துவம், இறையியல் போன்ற துறைகளில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தும்.

இருந்தபோதிலும் அறிவியல் துணையுடன் கூடிய ஆராய்ச்சிகள் இந்த துறைகளில் இன்னும் துவக்க நிலையில்தான் உள்ளது. இந்த துறைகளில் ஆராய்ச்சிகள் செய்ய நல்ல முயற்சிகள் எடுக்கப்பட்டாலும், ஆராய்ச்சிகள் ஒரு எல்லையை தாண்ட முடியாத நிலைமையில்தான் உள்ளது. சாதாரண மக்களிடமிருந்தும், அறிவியலாளர்களிடமிருந்தும் வரும் எதிர்ப்புகள்தான் இந்த நிலைமைக்கு முக்கிய காரணம்.

மாற்றங்களுக்கும், புது எண்ணங்களுக்கும் எதிர்ப்புகள் இல்லாமல் இருந்ததாக சரித்திரம் கிடையாது, கலிலியோ ஜூபிடரை கண்டுபிடித்தபொழுது அவருக்கு எதிர்ப்புதான் இருந்தது. அப்பொழுது இருந்த அறிவியலாளர்கள் யாரும் அவருக்கு ஆதரவு தரவில்லை. அவர்களின் மனதில் பதிர்ந்திருந்த நம்பிக்கைகள்,கொள்கைகள் கலிலியோவின் கருத்துக்கு இடமளிக்கவில்லை.

இப்பொழுது உள்ள மனநலமருத்துவர்களும், ஆராய்ச்சியாளர்களும் தங்களது கொள்கைகளையும்நம்பிக்கைகளையும் விட்டு வெளிவந்து இது சம்பந்தமாக உள்ள ஆதாரங்களை முறையான ஆய்வு செய்து உறுதி செய்ய வேண்டும். ஆனால் அந்த நாள் எப்பொழுது வரும் என்று யாருக்கும் தெரியவில்லை. பிறப்பு, மறுபிறப்பு, இரண்டுக்கும் இடைப்பட்ட நிலை போன்ற ஆராய்ச்சிகளுக்கு இந்த புத்தகம் எனது சிறிய பங்களிப்பு.

இந்த புத்தகத்தில் சொல்லும் ஒவ்வொரு வார்த்தையும் கற்பனையில்லாத உண்மை. மீண்டும் மீண்டும் நேரும் நிகழ்ச்சிகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன. சம்பந்தப்பட்டவர்களின் அடையாளம் மாற்றப்பட்டுள்ளன. இந்த புத்தகம் எழுத எனக்கு நான்கு வருட அவகாசம் தேவைப்பட்டது. எனது படிப்புக்கும்,அறிவியலுக்கும் ஒத்து வராத இந்த கருத்துக்களை சொல்லக்கூடிய தைரியம் வர நான்கு வருடங்கள் தேவைப்பட்டது.

ஒரு நாள் இரவு குளித்துக்கொண்டிருக்கும்பொழுது என்னுடைய அனுபவங்களை எழுதி ஆவணப்படுத்த வேண்டுமென்று கட்டுப்படுத்த முடியாத உணர்வு தோன்றியது. என்னுடைய அனுபவங்களை சொல்ல வேண்டிய சரியான தருணம் வந்து விட்டதாக ஆணித்தரமாக நம்பினேன். இனிமேலும் என்னுடைய அனுபவங்களை மனதிற்குள் பூட்டி வைக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால் அதே சமயத்தில் என்னுடைய அனுபவங்களை அனைவருடனும் பகிர்ந்து கொள்ள வேண்டிய அவசியமுள்ளது. கேத்தரின் வழியாக என் அறிவுக்கு தெரிய வந்த விஷயங்கள் என் வழியாக உலகுக்கு தெரிய வேண்டும். குளியல் அறையிலிருந்து வந்த பிறகு கேத்தரின் சம்பந்தப்பட்ட அனைத்து ஆடியோ கேசட்டுக்களுடன் என்னுடைய மேசையில் அமர்ந்தேன். நள்ளிரவுக்குப் பிறகு என் தாத்தாவின் ஞாபகம் வந்தது. எனக்கு பதின்ம வயதிருக்கும்போது என் தாத்தா இறந்து விட்டார். அவர் ஹங்கேரியிலிருந்து வந்தவர்.அவர்தான் எனக்குத் தேவைப்படும்போது தைரியமூட்டுவார். அந்த நடுஇரவில் என் தாத்தா இந்த புத்தகம் எழுதச்சொல்லி தைரியமூட்டுவதை நான் உணர்ந்தேன்.

 

தொடரும்-

 

 

கொசுறு :

தாத்தா "தோன்றிற் புகழொடு" அப்படின்னு சொல்லிட்டீங்க! எல்லோரும் எப்படி தாத்தா புகழோடு பிறக்க முடியும்?

பேராண்டி, நான்என்ன சொன்னேன்னா, வெளி உலகுக்கு அறிமுகமானா (தோன்றினால்) காந்தி போல அறிமுகமாகு; ஹிட்லர் போல அறிமுகமாகாதே. அப்படி சொன்னததான், புகழ் இல்லாதவர்கள் பிறக்க கூடாதுன்னு நீ நினைச்சிட்டே.

 

நடுப்புற கொஞ்சம் ஞாபகம் வந்துட்டு :

முடிந்தால் பாடல்களைக் கண்டுபிடியுங்கள்.

- உனை என்னேரமும் நினைந்துருகும் எனைக் கண்டால் மெனக்கெடுமோ?

- வசந்தங்கள் வாழ்த்தும் பொழுது உனது கிளையில் பூவாவேன்; இலையுதிர் காலம் முழுதும்,மகிழ்ந்து உனக்கு வேராவேன்.

- கோடி வகை நோய் கொடய்யா! சாகும் வரை அழ விடய்யா! இப்பிறவி முடியுமுன்னே என் கணக்கை முடித்திடய்யா.

மேலேயிருக்கும் மூன்று பாடல்களையும் கண்டு பிடிப்பவர்களுக்கு வயது நாற்பதுக்கு மேல் இருக்க வாய்ப்புகள் அதிகம்.

 

29 comments:

  1. Dear Packrisamay,

    Nice effort and flowing translation. Apologies for typing in English for your Tamil blog. The second song is from ninaivellam nitya. We saw the movie at karaikkudi. Karthick and jiji. Excellent vairamuthu and ilayaraja. Still listens. No idea about the other two. Good luck for your efforts. R Venkat (MKV)

    ReplyDelete
    Replies
    1. Dear Venkat

      Thanks. I am also not comfortable with Tamil typing. I did the translations. I have an angel to help with Tamil typing. Once I finished my translation, I leave the script on the desk in the night, when I woke up in the morning, I can see the typed script in the monitor. Only less than 10% is my typing.

      Your answer is correct for the second one. Let me wait for someone to come with other answers.

      Delete
  2. Dear anna,

    Super effort,Unga muyarchi vetri pera enngalathu valthugal.

    unga "about me" la iruka Introduction parthe appdi shock aiten. enna rasanai ya kondu poringa. its like, yaro nama kita story sollura mathi iruku.

    ninga oru foreign author book ku tamil version kudukuringa, but still antha book la irukura interest konjam kuda koraiyama parthukiringa. sema ya iruku. keep going and please dont stop for any reason. True comments kuduka nanga ellam irukom.

    my best wishes.

    With Love
    Mathan Ramaraj.

    ReplyDelete
    Replies
    1. Dear Madhan

      Thanks for taking time to read. Later I will write about me experiences with "Stain". If possibe you can watch "StatinNation" video in the net. I will be posting every Friday morning. I am very happy to have your support.

      Anbudan
      Packirisamy

      Delete
  3. அன்புள்ள சாமி அண்ணாவுக்கு,
    உங்கள் முயற்சி மிகவும் பாராட்டுக்கு உரியது. நீங்கள் சிறப்பாக மொழி பெயர்த்து இருக்கிறீர்கள். உங்களுக்கு கடவுள் மிகுந்த பொறுமையும், மன உறுதியும் தர வேண்டி இறைவனை பிரார்த்திக்கிறேன்...சிவா-ப்ரியா

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சிவா – ப்ரியா. தயவுசெய்து தொடர்ந்து படித்துவரவும்.
      அன்புடன்
      சாமி.

      Delete
  4. Anbu pakkiri..
    Ithhanai naal engirunthaai?.
    Thiramayai olithu vaippavargal, antha thiramayin payanaalikalai vida pavam seithavarkal.
    Sabaikku va.
    Sankath thamilil kavi padu.
    Unnul urangum "unnai" veli konar!.
    Unnal mudiyum..
    Arputhamana myyarchi.Eliya nadai.
    Pira naattu nallaringnar sasthiankal tamil mozhilyil piranthida un muyarchi udava vendum..

    Vazhthukkal


    Niraya ethirparkkum,
    un nanban
    Umapathy.

    N:B :
    2 vathu pattum, 3 vathu pattil pathiyaium kandu pidithu vitten. Ennoda vayathu Irubathukku ulle than!.

    ReplyDelete
    Replies
    1. அன்புள்ள நண்பா!
      என்ன காரியம் செய்துவிட்டாய்? சாபம் எனக்கு, சாபத்தினால் வரும் துன்பங்கள் உனக்கா? மனதால் கூட நண்பர்களுக்கு துன்பம் நினைக்கமாட்டான் இந்த மானுடன்.

      Thanks Umapathy. With all your blessing, I will try me level best. Knowing the answer does not constitute the answer. You have to tell the answers. Quote the first line of the song. Now you are less than 20, but once you know all the answers you will turn to 48, I suppose.

      Delete
  5. சிறப்பான ஒரு முயற்சி..

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி அய்யா. தயவுசெய்து தொடர்ந்து படித்துவரவும். ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் புதிய அத்தியாயங்களை பதிவிடுவதாக இருக்கிறேன்.

      Delete
  6. 1. மன்மத லீலையை வென்றார் உண்டோ... ? என் மேல் உனக்கேனோ பாராமுகம்... மன்மத லீலையை வென்றார் உண்டோ...? (படம் : ஹரிதாஸ்)

    2. ரோஜாவைத் தாலாட்டும் தென்றல்... பொன் மேகம் நம் பந்தல்... உன் கூந்தல் என் ஊஞ்சல்... உன் வார்த்தை சங்கீதங்கள் ஆ.. ஹா... (நினைவெல்லாம் நித்யா)

    3. பாவி என்னை மறுபடியும் பிறக்க வைக்காதே, செய்த பாவமெல்லாம் தீரும் முன்னே... இறக்க வைக்காதே... இறக்க வைக்காதே... (படம் : என்னதான் முடிவு)

    வயது 27... ஹிஹி...

    வலைச்சரத்தில் கண்டேன்... Followers ஆகி விட்டேன்... தொடர்கிறேன்

    வாழ்த்துக்கள் ஐயா...

    ReplyDelete
    Replies
    1. நன்றி திரு.தனபாலன். இருபத்தேழு வயதுகொண்ட நீங்கள் கூறிய பதில்கள் அனைத்தும் சரியான பதில்கள். இளைஞர்களுக்கு பழைய பாடல்கள் தெரியாது என்று தவறாக எண்ணியிருந்தேன். நல்ல வரிகளை அனைவரும் விரும்புகிறார்கள் என்று புரிந்து கொண்டேன். வாழ்த்துக்கள்.

      Delete
  7. சின்ன வேண்டுகோள் : Comment Approval (Comment Moderation) வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளுங்கள்... இந்த Word verification-யை எடுத்து விடுங்கள்... வயதானவர்கள் கருத்திட சிரமப்படுவார்கள்... பல பேர் விரும்புவதும் இல்லை... வாசகர்கள் வருவதும் குறைந்து விடும்... (Word verification image-இரண்டு அல்லது மூன்று முறை முயற்சித்து பிறகு தான் கருத்துரை Publish செய்ய முடிந்தது...)

    (Settings--->Posts and Comments--->Show Word Verification---> select 'No')

    நன்றி ஐயா...

    ReplyDelete
    Replies
    1. திரு.தனபாலன். நீங்கள் கூறுவது சரி. மாற்றிவிட்டேன். மிக்க நன்றி.

      Delete
  8. Great effort Packiri!

    அழகு தமிழில் எளிய நடையில்
    புரியாத புதிரான வாழ்வின் ரகசியங்களைப் பற்றி
    நீ அறிந்த செய்திகளை எல்லோரும்
    பயனுற பகிரும் உன் முயற்சிக்கு வாழ்த்துக்கள்

    மிக்க அன்புடன்
    சத்யா

    ReplyDelete
  9. Dear Sathya

    Thank you very much. Please keep following.

    Anbudan
    Packiri N

    ReplyDelete

  10. வலைச்சர ஆசிரியர் பணியில் இருந்ததால் உங்களின் முதல் பதிவை பார்க்க தாமாதமாகிவிட்டது. ஒரு நேர்மறை எண்ணத்தை தருகிற பதிவின் தலைப்பே பதிவைப் படிக்கத்தூண்டுகிறது என்பது உண்மை. எளிமையான, அருமையான, கோர்வையான மொழிபெயர்ப்பு. DR.Brian Weiss அவர்கள் தமிழில் எழுதியிருந்தால் இப்படித்தான் எழுதியிருப்பரோ என எண்ணத் தோன்றுகிறது. வாழ்த்துக்கள் ஒரு அருமையான நூலை தமிழ் கூறும் நல்லுலகத்திற்கு அறிமுகப்படுத்தியதற்கு. தொடர்கிறேன்.

    திரைப்பட பாடல்களை கண்டுபிடிப்பதில் திண்டுக்கல் தனபாலன் அவர்களோடு யாரும் போட்டி போட முடியாது.அந்த காலம் முதல் இந்த காலம் வரை வந்துள்ள எல்லா திரைப்படப் பாடல்களும் அவருக்கு அத்துப்படி!

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்களுக்கு நன்றி ஐயா!

      உண்மைதான். திண்டுக்கல் திரு.தனபாலன் பதில் கூறியது எனக்கு மிகவும் ஆச்சரியம் அளித்தது. அவருக்கு போன் செய்து வாழ்த்துக்கள் தெரிவித்தேன். நாளை தொடர்ச்சியை எதிரபாருங்கள்.


      அன்புடன்
      பக்கிரிசாமி நீலகண்டம்

      Delete
  11. Great and useful effort. our best wishes. I have become the regular follower of your blog

    anbudan,

    S.Murugan

    ReplyDelete
  12. Thanks for your wishes. With your blessing, I will continue to have the same momentum till the end.

    Anbudan
    Packirisamy N

    ReplyDelete
  13. திரு. பக்கிரிசாமி அவர்களுக்கு,

    வணக்கம் மற்றும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    இந்த மொழிபெயர்ப்பு தங்களின் முதல் தமிழ் படைப்பு என்பதை அறியும்போது வியப்பாகவும் ஆச்சர்யமாகவும் உள்ளது. தமிழ் எழுத்துலகம் இவ்வளவு நாட்களாக உங்களை இழந்து விட்டது. எங்கு சென்று விட்டீர்கள் பக்கிரிசாமி அவர்களே (நல்லதோர் வீணை செய்தே அதை நலங்கெட புழுதியில் எறிவதுண்டோ?)

    தமிழ் மொழிபெயர்ப்பில் தலை சிறந்தவர் ரா.கி. ரங்கராஜன் அவர்கள், அவருக்கு இணையாக உள்ளது தங்களின் மொழிபெயர்ப்பு. தொடரை தெளிந்த நீரோடை போல், தடுமாற்றமில்லாமல் விறுவிறுப்பாக கொண்டு செல்கிறீர்கள். அடுத்த அத்தியாயத்திற்கு காத்திருக்கும் தவிப்பை ஏற்படுத்திவிட்டீர்கள் திரு. சுஜாதா அவர்களின் நாவல்களை போல.

    உங்கள் தமிழ் பணி தொடர வாழ்த்துக்கள். உங்களை தமிழ் சமுதாயம் மிக்க நன்றியுடன் வரவேற்கிறது.

    இவ்விடத்தில் பாரதிதாசன் கவிதையை எழுதலாம்.


    தமிழுக்கும் அமுதென்று பேர்
    அந்த தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
    உயிருக்கு நேர்!

    தமிழுக்கு நிலவென்று பேர்! – இன்பத்
    தமிழ் எங்கள் சமுகத்தின் விளைவுக்கு நீர்
    தமிழுக்கு மணமென்று பேர்!

    இன்பத் தமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊர்
    தமிழுக்கு மதுவென்று பேர்! – இன்பத்
    தமிழ் எங்கள் உரிமைச்செம் பயிருக்கு வேர்!

    தமிழுக்கும் அமுதென்று பேர்
    அந்த தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
    உயிருக்கு நேர்

    தமிழ் எங்கள் இளமைக்குப் பால் – இன்பத்
    தமிழ் நல்ல புகழ்மிக்க புலவர்க்கு வேல்

    தமிழ் எங்கள் உயர்வுக்கு வான்! – இன்பத்
    தமிழ் எங்கள் அசதிக்குச் சுடர்தந்த தேன்
    சுடர்தந்த தேன்

    தமிழுக்கும் அமுதென்று பேர்
    அந்த தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
    உயிருக்கு நேர்

    தமிழ் எங்கள் அறிவுக்குத் தோள்! – இன்பத்
    தமிழ் எங்கள் கவிதைக்கு வயிரத்தின் வாள்
    வயிரத் தின் வாள்

    தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய்
    இன்பத் தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ

    தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய்
    இன்பத் தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ

    தமிழுக்கும் அமுதென்று பேர்
    அந்த தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
    உயிருக்கு நேர்

    தமிழ் பற்றுடன்
    சௌந்தர பாண்டியன்

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும், பாராட்டுதலுக்கும் நன்றி, திரு.சௌந்தர பாண்டியன்.

      எங்கள் தமிழாசிரியர் திரு.சி.தங்கராசு அவர்கள் "குருடன் கிழித்தது, கோமணத்துக்கு ஆச்சு" என்று கூறுவார்கள். அனைவர்களுடைய ஆசியுடன் ஓரளவுக்காவது தேறியிருந்தால் மிகவும் மகிழ்ச்சி. இந்த முறை எளிதான நூலைத் தேர்ந்தெடுத்துள்ளேன். அடுத்தமுறை அனைவருக்கும் சற்று உபயோகமுள்ள நூலை மொழியாக்கம் செய்ய முயற்சிக்கிறேன். தொடர்ந்து படித்து வரவும்.


      அன்புடன்

      பக்கிரிசாமி நீலகண்டம்

      Delete
    2. நன்றி.

      நீங்கள் நல்ல அனுபவம் உள்ள, ஆளுமை உள்ள எழுத்தாளர் என்பதை உணருங்கள், உங்கள் சேவை தொடரட்டும்.

      தங்களது ABOUT ME பகுதியில் "நான் இங்கே எழுதும் அனைத்தும் Statin Drug, Lipitor-க்கு சமர்ப்பணம்" என்பதை படித்தவுடன் அதிர்ச்சி. யாரும் இதுவரைக்கும் ஒரு மருந்துக்கு சமர்ப்பணம் செய்தது இல்லை. நானும் கடந்த 6 வருடங்களாக STATIN சாப்பிடுகிறேன், அதை பற்றி கொஞ்சம் எழுதினால் எல்லோருக்கும் பயனாக இருக்கும்

      என்றும் அன்புடன்
      சௌந்தர்

      Delete
  14. Dear Soundar

    Lipitor is a dangerous drug, based on my experience. I cannot tell you, about that in one go. I took about a year, and due to many side effects I stopped the drug against my doctor’s advice. I consulted the cardiologist, he accepted my stand, stopping statin.

    Please watch “statinnation” in you tube. This drug can ruin one’s life. It is a slow poison. If you write to me at packirisamyn@yahoo.com.au, I can forward the some more details. Look for side effects of statin in Google, you will get more info.

    Anbudan
    Packirisamy N

    ReplyDelete
  15. .DR.Brian Weiss அவர்களின் “Many Lives Many Masters” – தங்களின் மொழிபெயர்ப்பை இப்போதுதான் படிக்கத் தொடங்கி இருக்கிறேன். நல்ல மொழிபெயர்ப்பு. தொடர்ந்து அடுத்த பதிவுகளையும் படிக்கிறேன். வாழ்த்துக்கள்!.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் பாராட்டுக்கும் மிகவும் நன்றி ஐயா!

      தாங்கள் தொடர்ந்து படிக்க விரும்புவது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. துணுக்குகளையும் படிக்க வேண்டுமாறு வேண்டிக்கொள்கிறேன்.

      நன்றி!


      அன்புடன்
      பக்கிரிசாமி நீலகண்டம்

      Delete
  16. வலைச்சரத்தில் ஜீஎம்பி ஐயா உங்களை அறிமுகப்படுத்தியதறிந்து மகிழ்ச்சி. தங்களது தளத்தினைக் கண்டேன். வாழ்த்துக்கள்.
    http://drbjambulingam.blogspot.com/
    http://ponnibuddha.blogspot.com/

    ReplyDelete
  17. valaichara arimugathal indru than ungal padivu padithan. vaalthukal.

    ReplyDelete
  18. இன்றைய வலைச்சரத்தில் GMB ஐயா அவர்கள் தங்கள் தளத்தினைக் குறித்து அறிமுகம் செய்திருக்கின்றார்.,

    அதன் வழியாக வந்தேன்.. தங்களது தளத்தினைக் கண்டேன்.
    அன்பின் நல்வாழ்த்துக்கள்..

    ReplyDelete